பண் · சாதாரி
பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.
Open this verse
பண் · சாதாரி
பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில் மூன்றோர்கணையாற்கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.
Open this verse
நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்கூரின்மலி சூலமது ஏந்தியுடை கோவணமும் மானின்உரிதோல்காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே.
Open this verse
காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்மாலைமணம் நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர்ப்பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி விண்ணுலகம் ஆளுமவரே.
Open this verse
கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே.
Open this verse
மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு வெள்விடையினான்உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை யாரையடை யாவினைகளே.
Open this verse
மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே.
Open this verse
பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.
Open this verse
நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்நாசமற வேண்டுதலின் நண்ணலெளி தாம்அமரர் விண்ணுலகமே.
Open this verse
தூயமல ரானும்நெடி யானும்அறி யாரவன தோற்றநிலையின்ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொள் மார்பினகலம்பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமேமேயவன தீரடியு மேத்தஎளி தாகுநல மேலுலகமே.
Open this verse
தடுக்கினையி டுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தருங்கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே.
Open this verse
மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனைஅந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தன்அணியார்செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே.
Open this verse