பாடல் 791 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 42 / 66
நகரமாந்தர்கூற்று
கம்பராமாயணம் 791 · கார்முகப் படலம்
'தயரதன் புதல்வன்' என்பார்;'தாமரைக் கண்ணன்' என்பார்;'புயல் இவன் மேனி' என்பார்;'பூவையும் பொருவும்' என்பார்;'மயல் உடைத்து உலகம்' என்பார்;'மானுடன் அல்லன்' என்பார்;'கயல் பொரு கடலுள் வைகும்கடவுளே காணும்!' என்பார்.