பாடல் 6898 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவலம்புரம் - திருத்தாண்டகம் · பாடல் 8 / 10
திருவலம்புரம் – திருத்தாண்டகம் · 6.58.8
பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும் பழனம் பதிபழமை சொல்லி நின்றார்நல்லார் நனிபள்ளி யின்று வைகி நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச் சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.