பாடல் 7027 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருஅடைவு - திருத்தாண்டகம் · பாடல் 5 / 11

திருஅடைவு – திருத்தாண்டகம் · 6.71.5

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.
பகிர்