பாடல் 1529 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருவான்மியூர் · பாடல் 4 / 11
திருவான்மியூர் · 2.4.4
மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.