பாடல் 2855 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருப்பூந்தராய் · பாடல் 9 / 11

திருப்பூந்தராய் · 3.2.9

கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய் மங்குல்வண்ணனும் மாமல ரோனும் மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு பொங்குநீரின் மிதந்தநன்பூந்தராய் போற்றுதுமே.
பகிர்