பாடல் 3285 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருச்சிற்றேமம் · பாடல் 4 / 11
திருச்சிற்றேமம் · 3.42.4
. கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல் முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன் எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான் அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே.