பாடல் 3843 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருஅம்பர்மாகாளம் · பாடல் 2 / 11

திருஅம்பர்மாகாளம் · 3.93.2

கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
பகிர்