பாடல் 8009 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவாவடுதுறை · பாடல் 6 / 10

திருவாவடுதுறை · 7.70.6

குறைவி லாநிறை வேகுணக் குன்றே கூத்த னேகுழைக் காதுடை யானேஉறவி லேன்உனை அன்றிமற் றடியேன் ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டேசிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொ னேதிரு வாவடு துறையுள்அறவ னேயெனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
பகிர்