பாடல் 7385 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருஅரிசிற்கரைப்புத்தூர் · பாடல் 8 / 11
திருஅரிசிற்கரைப்புத்தூர் · 7.9.8
பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம் பெருங்கா டரங்காகநின் றாடலென்னேகறைக்கொள் மணிகண் டமுந்திண் டோள்களுங் கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.