பாடல் 911 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · வரைக்காட்சிப் படலம் · பாடல் 14 / 77

சேனைகட்கு வேண்டுவன செய்யப்படுதல்

கம்பராமாயணம் 911 · வரைக்காட்சிப் படலம்

நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார்;ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார்;கார் நிரை எனக் களிறு கா இடை நிரைத்தார்;மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார்.
பகிர்