பாடல் 10082 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 236 / 251

கம்பராமாயணம் 10082 · இராவணன் வதைப் படலம்

‘அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்குஅடுத்தது! நான் அரக்கர் வேந்தன்பின்னேயோ, இறப்பது? முன்பிடித்திருந்தகருத்ததுவும் பெற்றிலேனே!முன்னேயோ விழுந்ததுவும் முடித்தொகையோ?படித்தலைய முகங்கள் தானோ?என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்தபரிசு! இதுவோ பாவம்!
பகிர்