அதுகேட்டுத் திரிசிரன் ஆரவாரித்து வர, அனுமன் அவனைத் தரையிலிட்டு அரைத்து மேல் திசை வாயிலுக்குப் போதல்
கம்பராமாயணம் 8033 · அதிகாயன் வதைப் படலம்
‘ஆம், ஆம்! ‘என, தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து, அடர்த்தான்;கோமான் தனிப் பெருந் தூதனும், எதிரே செருக் கொடுத்தான்,‘காமாண்டவர், கல்லாதவர், வல்லீர்! ‘எனக் கழறா,நா மாண்டனர் அயல் நின்று உற, நடுவே புக நடந்தான்.