பாடல் 8412 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 280 / 300
உடன் சென்ற மகளிர்
கம்பராமாயணம் 8412 · நாகபாசப் படலம்
தாங்கிய துகிலார், மெள்ளச் சரித்து வீழ் குழலார், தாங்கிவீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார், வல்லிவாங்கிய மருங்கின் மாதர், அனந்தரால் மயங்கி வந்தார்.