பாடல் 840 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருஅச்சிறுபாக்கம் · பாடல் 3 / 11
திருஅச்சிறுபாக்கம் · 1.77.3
காரிரு ளுருவ மால்வரை புரையக் களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடிநீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்பேரரு ளாளர் பிறவியில் சேரார் பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.