பாடல் 4241 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருக்கெடிலவடவீரட்டானம்* · பாடல் 4 / 10
திருக்கெடிலவடவீரட்டானம்* · 4.2.4
மடமான் மறிபொற் கலையும் மழுபாம் பொருகையில் வீணை குடமால் வரைய திண்டோ ளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும் இடமால் தழுவிய பாகம் இருநில னேற்ற சுவடுந் தடமார் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.