பாடல் 6337 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · கோயில் - புக்கதிருத்தாண்டகம் · பாடல் 9 / 11
கோயில் – புக்கதிருத்தாண்டகம் · 6.2.9
சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர் சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப் படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டுவந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம் மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்றப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.