பாடல் 6716 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருமழபாடி - திருத்தாண்டகம் · பாடல் 8 / 10
திருமழபாடி – திருத்தாண்டகம் · 6.39.8
பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய் பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய் வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய் தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே.