பாடல் 6945 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருவானைக்கா - திருத்தாண்டகம் · பாடல் 5 / 10

திருவானைக்கா – திருத்தாண்டகம் · 6.63.5

பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப் புண்ணியனை நண்ணாதார் புரநீ றாகஎய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை ஏறமரும் பெருமானை இடமா னேந்துகையானைக் கங்காள வேடத் தானைக் கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்செய்யானைத் திருவானைக் காவு ளானைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
பகிர்