பாடல் 7140 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருப்பாசூர் - திருத்தாண்டகம் · பாடல் 7 / 10

திருப்பாசூர் – திருத்தாண்டகம் · 6.83.7

இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார் இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர் அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித் தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்தபணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
பகிர்