பாடல் 7196 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவின்னம்பர் - திருத்தாண்டகம் · பாடல் 5 / 10
திருவின்னம்பர் – திருத்தாண்டகம் · 6.89.5
சூழுந் துயர மறுப்பார் போலுந் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும் ஆட லுகந்த அழகர் போலுந்தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு தன்மை யளித்த தலைவர் போலும்ஏழு பிறப்பு மறுப்பார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.