பாடல் 7480 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருவேள்விக்குடி · பாடல் 8 / 10
திருவேள்விக்குடி · 7.18.8
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலருறைவான் தம்பரம் அல்லவர் சிந்திப்ப வர்தடு மாற்றறுப்பார் எம்பரம் அல்லவர் என்னெஞ்சத் துள்ளும் இருப்பதாகில் அம்பரம் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.