பாடல் 2957 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருக்கோட்டாறு · பாடல் 1 / 11

பண் · காந்தாரபஞ்சமம்

திருக்கோட்டாறு · 3.12.1

வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறைஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளிகோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே.
பகிர்