பாடல் 5600 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · பொழில் இறுத்த படலம் · பாடல் 60 / 60
அநுமனது போரார்ப்பு
கம்பராமாயணம் 5600 · பொழில் இறுத்த படலம்
மண்டலம் கிழிந்த வாயில் மறிகடல் மோழை மண்ட,எண்திசை சுமந்த மாவும் தேவரும் இரியல் போக,தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,அண்டமும் பிளந்து விண்டதாம் என அனுமன் ஆர்த்தான