சுந்தர காண்டம் · திருவடி தொழுத படலம் · பாடல் 78 / 93
வாங்கிய ஆழி தன்னை, 'வஞ்சர் ஊர் வந்ததாம்'என்று,ஆங்கு உயர் மழைக் கண் நீரால், ஆயிரம் கலசம் ஆட்டி,ஏங்கினள், இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனிவீங்கினள்; வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள்.