பாடல் 116 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருவீழிமிழலை · பாடல் 7 / 11
திருவீழிமிழலை · 1.11.7
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவாவரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பிவிரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.