பாடல் 4289 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருஏகம்பம் · பாடல் 1 / 10
பண் · காந்தாரம்
திருஏகம்பம் · 4.7.1
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனைஅரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்திஇரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.