பாடல் 6479 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருவிடைமருது - திருத்தாண்டகம் · பாடல் 3 / 10

திருவிடைமருது – திருத்தாண்டகம் · 6.16.3

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்பூதங்க ளாய புராணர் போலும் புகழ வளரொளியாய் நின்றார் போலும்பாதம் பரவப் படுவார் போலும் பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்ஏதங்க ளான கடிவார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
பகிர்