பாடல் 6480 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவிடைமருது - திருத்தாண்டகம் · பாடல் 4 / 10
திருவிடைமருது – திருத்தாண்டகம் · 6.16.4
திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்பண்குணத்தார் பாடலோ டாட லோவாப் பரங்குன்ற மேய பரமர் போலும்எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.