பாடல் 6994 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் · பாடல் 3 / 10
திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம் · 6.68.3
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்றுபத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட் பாமாலை பாடப் பயில்வித் தானைமுத்தினை யென்மணியை மாணிக் கத்தை முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.