பாடல் 6962 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருவேகம்பம் - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10

திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.1

உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண் வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலேதெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந் திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
பகிர்