பாடல் 7034 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருவலஞ்சுழி - திருத்தாண்டகம்
திருவலஞ்சுழி – திருத்தாண்டகம் · 6.72.1
அலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்தொலையாத வென்றியார் நின்றி யூரும் நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டுஇலையார் படைகையி லேந்தி யெங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்தமலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.