பாடல் 4 · விநாயகர் நான்மணிமாலை · சி. சுப்ரமணிய பாரதியார்

விநாயகர் நான்மணிமாலை 4 · அகவல்

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!சிற்பர மோனத் தேவன் வாழ்க!வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!படைப்பபுக் கிறையவன் பண்ணவர் நாயகன்இந்திர குரு என திதயத் தொளிர்வான்சந்திரமவுலித் தலைவன் மைந்தன்கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;குணமதிற் பல வாம்; கூறக் கேளீர்;உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;திக்கெல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்துச்ச மென்றெண்ணித் துயரிலா திங்குநிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்;அச்சம் தீரும்; அமுதம் விளையும்;வித்தை வளரும்; வேள்வி யோங்கும்;அமரத் தன்மையு மெய்தவும்இங்கு நாம் பெறலாம்; இ·துணர் வீரே.கமலா சனத்துக் கற்பகமே.
பகிர்