பாடல் 28 · விநாயகர் நான்மணிமாலை · சி. சுப்ரமணிய பாரதியார்

விநாயகர் நான்மணிமாலை 28 · அகவல்

எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!பொறுத்தா ரன்றே பூமியாள்வார்;யாவு நீயாயி னனைத்தையும் ஒறுத்தல்செவ்விய நெறி யதிற் சிவநிலை பெறலாம்;பொங்குதல் போக்கிப் பொறை யெனக்கீவாய்;மங்கள குணபதி மணக்குளக் கணபதிநெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;அகல்விழி உமையா ளாசை மகனே.நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றிஆள்வதும் பெரொளி ஞாயிறே யனையசுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்நோக்கமாகக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;காத்தருள் புரிக, கற்பக விநாயகா,காத்தருள் புரிக,கடவுளே யுலகெலாம்கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளேஅங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்எங்குல தேவா, போற்றி!சங்கரன் மகனே தாளினைப் போற்றி.
பகிர்