பாடல் 1 · ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் 1

பார்பூத்த பெருந்தேயம் பற்பலவு மெடுத்தேத்தச்சீர்பூத்த வெண்மகளுஞ் செம்மகளுங் கலந்துறையத்தானமொடு தவமுமொரு தடையின்றித் தழைந்தோங்கமானமொடு புகழ்வயங்க வயங்குபெருஞ் சோணாட்டின்முத்தரெலாங் கொண்டாட மூவாதொன் பதுகோடிசித்தரெலா மகிழ்ந்துறையத் திகழ்திருவா வடுதுறையிற்புண்ணியமே தழைந்ததெனப் பொலிதருசத் துவந்தழையவெண்ணியவன் பருக்கருள்வா னினிதுவீற் றிருந்தருள்வோய்!சொல்லாலின் பூற்றரும்பத் துதிநால்வர்க் கருள்செய்வான்கல்லாலி னமர்ந்ததுமுன் கற்றுவிட்ட படிசெய்துதிருநோக்காற் பரிசத்தாற் றிகழுமறைப் பொருள்வாக்காலுருநோக்காப் பாவனைநூல் யோகத்தா லவுத்திரியால்நின்னிய லமைந்து நிகழ்திரு வடிக்குநாயினுங் கடையே னவிலும்விண் ணப்பந்தாயினுஞ் சிறந்த தயைசா னின்னோடொன்றியொன் றாதுறு மொன்றேயன்றி வேண்டல னருளுதி யுவந்தே.
பகிர்