பாடல் 45 · ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் 45
வரையகம் பொலியுங் காழகிற் றுணியும் வரைக்கருஞ்சந்தனக் குறடு -மாமணித் திரளு மதகரிக் கோடும் வளமயிற் பீலி யும் வரன்றித்,திரையெடுத் தெறிந்து கடலைக் கலக்குத் திருப்பெ ருங் காவிரித் தென்பாற்-றிகழ்தரு திருவா வடுதுறை யமருந் தேசிகனம்பல வாணன்,புரைதபு சரணத் தடியவர் குழுமிப் பொங்குபே ரன்புபூண் டேத்திப் -பொலிமலர்க் கமல முதன்மல ரிடவப் பூப் பொதிந் தவிர்பெருங் காட்சி,விரைமலர்க் கணைவேள் பழம்பகைகுறித்து விட்டபல் வாளியு மடிமேல் -வீழ்ந்துறப் பற்றித் தஞ்செய லின்மை விளக்குபு கிடத்தலொத் தனவே.