பாடல் 10236 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 139 / 358
பரினான்கு ஆண்டுகள் முடிந்தன; நீ பரதனிடம் இன்று சென்று சேர்க ‘என்று தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி நீங்குதல்
கம்பராமாயணம் 10236 · மீட்சிப் படலம்
‘இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,படை அவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும் படுத்து,கடை உவாவினில் இராவணன் தன்னையும் கட்டு,