பாடல் 1 · கதிர்காமக் கலம்பகம் · கந்தப்ப சுவாமிகள்

கதிர்காமக் கலம்பகம் 1

சீர்பூத்த வரைமடந்தை திருப்பாகப் பிறைச்சடிலனேர்பூத்த வுள்ளகத்தி லெழுஞ்சுடரே யாமென்னத்தானவர்தங் குலம்பதைக்கச் சதுமறையா கமங்கலிப்பவானவர்தங் குலம்பிழைக்க மறைமுதல்வ னகங்களிப்பவுன்னற் கருங்கதியா யுரைப்பரிய வான்பொருளாய்த்தன்னந் தனிமுதலாய்த் தத்துவமாய்ச் சுத்தமுமாயூனக்கண் கொண்டுணர்வார்க் கொளித்திருந்த நள்ளிருளாய்ஞானக்கண் கொண்டுணர்வார் நாயகமாய் வந்துதித்தோய்.கடக்குறவ ரிடக்கொடியுங் கடக்கிரியுந் தரப்பொலிந்தமடப்பிடியு மிடப்புறனும் வலப்புறனுங் களிப்பூரச்சூருரமுங் கார்வரையுஞ் சூறைபடப் பேருததிநீரலையத் தாவயில்வே னீள்புயத்தோர் பானிலவச்சிறைப்படரிக் குழுக்குலவச் செய்ப்புயமார் பகத்திருக்குநறைப்படலைக் கடப்பையிடை நாயகமா மணிவிளங்கமண்ணகம்விண் ணகமெவைக்கு மதாணியெனத் தகைமைதருங்கண்ணகன்ற சுயஞ்சுடராய்க் கதிர்காமத் திருந்தோய்கேள்மந்திரமுந் தத்துவமும் வான்கலையு நீள்பதமுஞ்சுந்தரமாம் வன்னபதம் யாவையுமாந் தூயோய்நீசாவதுவும் பிறப்பதுவுந் தமையகலா துழற்றவுழறேவர்கடந் தேவர்கட்குந் தெய்வசிகா மணியானாய்மறையவர்க்கு மாலறியா வள்ளலுக்கு மோனபதநிறைமொழியைப் பகர்ந்தனையே னின்றகைமைக் களவுண்டேஎச்சமயத் தார்களுமெம் மிறையிறையென் றேத்தவவர்க்கச்சமயந் தோறுஞ்சென் றருள்புரிவா னாகினையேகாட்சிமுத லெண்ணளவை காண்பரிய தற்கடந்தமாட்சியுடை யாயெனது வாய்துதிக்க வந்தனையேகுன்றிருமாப் படக்குதற்கோ குன்றவர்வாழ்த் தெடுப்பதற்கோகுன்றகத்தே யிருப்பதற்கோ குன்றுதோ றாடினையேசத்திகளை யீவதற்கோ சத்தியிலார்க் காய்வதற்கோசத்தியமீ தென்பதற்கோ சத்தியயி லேந்தினையேஆறுமுக மகிழ்வதற்கோ வாறுமுக மாவதற்கோவாறுமுக மதுகுறித்தோ வாறுமுக மாயினையேஅவனவ ளதுவெனு மவைவினை யுறவருசிவனவ தவமுறு செயலறு கதியினைமயலற மனநக மணியென மலரடிநயமறு மவரிட நடநவில் கருணையைஇவையிஃ தெமதென விவனக மெனவருபவையற வெனையரு டருபர கதியினைஒளியிரு ளுளதில வுருவரு வெனலறவளிபுன லெரிநிலன் வெளியென மருவினைஅலைகட லிடையுறை மரமென வருமவனிலைகெட வருமொரு மிடலுடை யயிலினைஉலைவற வுடலுயி ரொருபொரு ளமைவுறவிலையறு மொருபொரு டருகுரு வுருவினைஒருவரை யெழுவரை யட்டனைஉததிக ளழவயி னட்டனைமருவல ரறவடி யிட்டனைமறைமறை முனிசெவி விட்டனைஉருவி னுற்றனை (1) மருவு மானினைஒருவி னுற்றனை (2) மருவு மானினைஉரையில் வந்தனை (3) வார ணத்தினைஉரையில் வந்தனை (4) வார ணத்தினைஉருமாறிப் பவக்கடற்புக் கூசலா டுவர்தமக்குக்கருமாறிப் பதமடையக் கடைப்பிறவி காண்பவனீ.ஆறாறு தத்துவமு மாம்பரிச கன்றொருநீவேறானா லிங்கெவையும் விளங்குவதற் கொவ்வாவே.முப்பாழும் பாழாய் முடிந்தவிடத் தேமுளைத்தவப்பாழும் பாழா யறிந்தவனு நீயன்றே.ஆதார மீதான மாயிடைதோ றுந்திரிபாய்நீதானோ வன்பர்கட்கு நின்றவனு மற்றுண்டே.எனவாங்கு,புனன்மலி யுலகத் தனைவருங் கண்டுதனியுயி ரிவனெனச் சாற்றும்யா னொருவனைநல்வினை தீவினை யென்றநா யிரண்டுந்தொல்வினை மலமெனச் சூழரா மூன்றுமந்தக் கரணமென் றறைபுலி நான்கும்பந்தவிந் தியமாம் பாய்மா வைந்துங்காம மாதிய கள்வ ரறுவருமேமப் பிறப்பா மெழுவகைக் கூற்றுமெமக்கிரை யெமக்கிரை யெனப்பல கூறிச்சுமக்கருந் துயர்செயத் தொடர்த னோக்கிப்படும்பரி சனைத்தையும் பார்த்து வாளாவிடும்பரி சுன்ன துன்னடி யார்க்கூஉயவர்பணி யென்றலைக் கமைய நிறீஇப்பவப்பிணக் ககற்றப் பகர்தனின் கடனே.
பகிர்