பாடல் 47 · குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · சிவஞான சுவாமிகள்
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 47 · முத்தப் பருவம்
அசும்புபட வாய்நீர் வழிந்தோட வோடிவந் தணையுமைங் கரக்களிற்றை -ஆகத் திடைக்கொண்ட னாப்பட் டடித்தென வணைத்தலும் பணைத்து வளர்பொற்,றசும்புதனை யெ திருமிரு களிறெனத் தன்மத் தகங்கொண்டு தாக்கி மயிரின் -றண்ணிய வொழுக்கினை யணைக்குமொரு கந்தெனத் தடவுக்கை யாற்சுழியவவ்,வீசம்புண்மறை பட்டெழுந் தெண்ணிலா வெனநகை விரித்தொல்லை மேலெடுத்து -வெகுளிதீர்த் துளங்குழைய முத்தாடி வைத்தாடும் வியனகர்க் குளந்தை வாழவே,பசும்பொனவிர் திருமேனி யழகொளிர நின்றுநின் பனிவாயின் முத்த மருளே -பங்கயச் செல்விதொழு மங்கையர்க் கரசி நின் பனிவாயின் முத்த மருளே.