பாடல் 55 · குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · சிவஞான சுவாமிகள்
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 55 · வாரானைப் பருவம்
வயிரா வணந்தொறு மெழுங்குளத் தூர்வந்து வான்கோடி ரண்டாயிரம் -வாய்த்ததனை யாளும் பிரானைமரு மத்திரு மருப்பினா லாளாண்மையும்,செயிரா வணங்கினைப் பல்லுயிரு மெய்தத் தெறூஉமலக் களிறைந்தையும் -திக்கெட்டு மண்டப் பரப்புங் கடந்திறச் செற்றிடும் விழிவீரமும்,பயிரா வணஞ்சொரியு மேகத்தி னருள்கூர்ந்த பதநடையு நோக்கியஞ்சிப் -பனிமா லடுக்கலெனு நுந்தையின் னுரிமையாற் பரிந்துபின் வருதலேய்ப்ப,அயிரா வணம்பின்பு தொடரத் தொடைக்கூந்த லமுதாம்பி கைவருகவே -அருண்மடை திறந்தூற்று புன்மூர லழகொளிர வம்பொனா யகிவருகவே.