பாடல் 84 · குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · சிவஞான சுவாமிகள்
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 84 · நீராடற் பருவம்
வளைத்தமுப் புரிசைத் தலத்தினின் றயில்கொண்ட வாளிக்கு ழாமெழுதல்போல் -வயங்கிய பசும்பொற் றிரட்குவட் டினையும்வல வாளரித் திரளையுநெடுந்,--துளைத்தகை முகக்கடாக் குஞ்சரத் தினையுஞ் சுழிக்குமச் சுழிமூன்றினுந் -துண்ணெனவெழுந்தநெட் டுடல்வாளை தெய்வத் துறைப்புனற் கங்கை நதியிற், --றிளைத்ததிற நோக்குவார்க் கிப்புனல் படிந்தாடு செய்தவப் பயனையிந்தத் -திண்பூத பரிணாம தேகத்தி லுதவுமா தீர்த்தமிது வெனவியப்பு, --விளைத்துவிண் ணாடும் பழிச்சவரு பாலி நதி வெள்ளநீ ராடியருளே -வெறிநறாச் சோலை சூழ் தென்குளத் தூரம்மை வெள்ளநீ ராடியருளே.