பாடல் 96 · குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · சிவஞான சுவாமிகள்

குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 96 · ஊசற் பருவம்

திங்களொளி காட்டுமுக மீதுலாவு நாட்டச் செழுங்கய லுதைந்தூக்கலாற் -செம்பொனி னிழைத்தமகரக்குழைக ளுஞ்செவிச் செங்கனக வூசலாடப்,--பங்கய விருக்கைமட மாதரது நோக்கியிரு பாலுமிரு வேமாட்டவும் -பாயுங் கயற்குல மசைக்குமவ்வூசலிற் பாய்ந்திலதிவ் வூசலெனநீள்,--அங்கையின் வலித்துநனி யாட்டுதொறு நின்வா யரும்புநகை நிலவெழிலினுக்-காங்கவர் முகத்திங்கள் சாயப் புராணமறை யாகம மளந்தறிவரும்,--புங்கவன் மருங்கு குடி கொண்டவமு தாம்பிகை பொன்னூச லாடியருளே -பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே.
பகிர்