பாடல் 59 · குமரமாலைப் பிள்ளைத்தமிழ் · வீரபத்திரக் கவிராயர்
குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 59 · வருகைப் பருவம்
பணவா ளெயிற்றுப் பணிக்கரசும்பதுமா சனனு நின்பேற்றைப்பகர்தற் கரிதா மோராறுபடைவீ டமர்ந்தன் பருக்கருள்வோய்கணமார் குணங்கு துணங்கைகொட்டக்களம்புக் கமரி னிணங்கமழுங்கதிர்வேல் விடுத்துச் சுரர்பகையின்கருவே ரறுக்க வருமுதலேமணமார் பொழிற்றேன் மிசைந்தளிவிண்வழிபோஞ் சத்த மாவுடலைமறைப்பக் கதிர்நீ னிறப்பரியாய்மருவற் கென்னோ வெனவயிர்ப்பத்துணர்வான் பொதுளும் புல்லைநகர்த்தோன்றால் வருக பசுஞ்சூட்டுத்தோகை விரித்து நடஞ்செய்மயிற்றுரங்கா வருக வருகவே.