பாடல் 6 · குமரமாலைப் பிள்ளைத்தமிழ் · வீரபத்திரக் கவிராயர்

குமரமாலைப் பிள்ளைத்தமிழ் 6 · காப்புப் பருவம்

நறைமருவு கற்பகத் தாரணி புயக்குன்றினாளுமயி ராணி கொம்மைநகிலந் திளைத்துமவ ளிதழமுத வொடுகீரயிறைமருவு பனிவரை முகட்டெழு கருங்கொண்டலேய்ப்பவோங் கயிரா வதத்தெருத்தமிசை வருவான் மருத்துவ னிணைச்சரணமிதயத் திருத்திநினை வாம்பொறைமருவு மயில்கே டகங்கண்டை நளினமுயர்பொற்புறுந் தண்டு சேவல்போரிடங் கம்பகழி வாளபய வரதம்விற்பூணுமா றிருகரனை வெண்பிறைமருவு செஞ்சடைக் கயிலைப் பிரானெம்பிராட்டிக்கு மகவாகி வான்பிறங்கநிவர் குமரப் பிறங்கல்வரு சண்முகப்பிள்ளையைக் காக்க வென்றே.
பகிர்