பாடல் 51 · மறைசைக் கலம்பகம் · யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப்புலவர்

மறைசைக் கலம்பகம் 51

சேணாக முடனதியு மதியுங் கொண்ட திருமறைக்காட் டிறைவர்நகர் வருங் கொற்றீரே,வாணாக முழுமதிய மீதிற் றோன்றும் வாணீலநஞ்சதனான் மயக்கா நின்றீர்,பூணாகந் தனையுநஞ்ச நேராய்க் கஞ்சன்புரிந்தனனா கிற்கரம திக்குப் பூண்டோ,ரூணாக விழைந்தவரென் றெண்ணாதோது முரைவீசி யெப்படியுள் ளுருக்கு வீரே.
பகிர்