பாடல் 44 · நடராச சதகம் · சிதம்பரநாத முனிவர்
நடராச சதகம் 44 · சோடசோபசாரம்
வினவுசோ டசபூசை யுபசார முறைபகரின்மேவுமா வாகனமுடன்மிக்கவா தனமிலகு பாத்திய மருக்கியம்விதித்தவா சமனமொடுமஞ்சனவிவித மணியாடை கந்தமுப வீதமிழைசாற்றுமலர் தூப தீபந்தருநிவே தனம்வேள்வி பலிகணித் தியவிழாத்தாமிதென நூல்புகன்றாய்பனகதா கந்தமலர் புகை சுடர் நிவேதனம்பஞ்சோப சாரமென்னப்பத்தருய மிக்கமறை யாகமபு ராணநூல்பயில்தரவெ டுத்துரைத்தாய்தினமுமறை முனிவர்மூ வாயிரத் தவர்பூசைசெய்தக மகிழ்ந்துபோற்றுஞ்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீச நடராசனே.