பாடல் 61 · நந்திக் கலம்பகம் · அறியப்படாத ஆசிரியர்
நந்திக் கலம்பகம் 61
திருவின் செம்மையு நிலமக ளுரிமையும்பொதுவின்றி யாண்ட பொலம்பூட் பல்லவதோடுணை யாக மாவெள் ளாற்றுமேவலர்க் கடந்த வண்ணா னந்திநின்றிருவரு நெடுங்கண் சிவக்கு மாகிற்செருநர் சேரும் பதிசிவக் கும்மேநிறங்கிளர் புருவந் துடிக்கி னின்கழலிறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மேமையில் வாளுறை கழிக்கு மாகினடங்கார் பெண்டிர்பூண்முலை முத்தப் பூண்கழிக்கும்மேகடுவாய் போல்வளை யதிர நின்னொடுமருவா மன்னர் மனந்துடிக் கும்மேமாமத யானை பண்ணினுதிர மன்னுநின் னெதிர்மலைந் தோர்க்கே.