பாடல் 3809 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் · பாடல் 1 / 11
பண் · சாதாரி
திருத்துருத்தியும் – திருவேள்விக்குடியும் · 3.90.1
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற் தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள் பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ் வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.