பாடல் 7855 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருப்புன்கூர் · பாடல் 1 / 10

திருப்புன்கூர் · 7.55.1

அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாகவந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்எந்தை நீயெனை நமன்றமர் நலியின் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
பகிர்