பாடல் 7960 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருநின்றியூர் · பாடல் 1 / 7
திருநின்றியூர் · 7.65.1
திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ் சிலந்தி யார்செய்த செய்பணி கண்டுமருவு கோச்செங்க ணான்றனக் களித்த வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.